அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் நௌபீஸ் ஜேர்மன் பயணம்!
News

அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் இரு வாரகால விஜயம் மேற்கொண்டு சனிக்கிழமை (02) இரவு ஜேர்மன் பயணமானார்.
ஜேர்மனில் இடம்பெறவுள்ள மாநகரங்களின் நீர் மீள்திறன் பற்றிய ஆய்வு செயலமர்வில் பங்குபற்றுவதற்காகவே அவர் அங்கு செல்கிறார்.
இந்த செயலமர்வில் ஜேர்மன் நாட்டிலுள்ள 03 மாநகர சபைகளினதும் மேலும் 05 நாடுகளில் இருந்து தலா ஒரு மாநகர சபை என்ற ரீதியிலும் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ், இரு வார காலத்திற்கான முழுமையான புலமைப் பரிசிலுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த செயலமர்வைத் தொடர்ந்து சுவிஸ்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஒரு வார காலம் சுற்றுலா செல்வதற்கான வாய்ப்பையும பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் ஜப்பான், சீனா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கும் இவர் உத்தியோகபூர்வ பயணங்களை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
(அஸ்லம் எஸ்.மௌலானா)