New Updates! Fresh news just arrived.

1990 ஆம் ஆண்டு இடம்பெயர்வின் அடையாளமாகத் திகழும் அல்-காசீ...

News

1990 ஆம் ஆண்டு இடம்பெயர்வின் அடையாளமாகத் திகழும் அல்-காசீமி சிட்டி: 19ஆவது ஆண்டு நினைவு விழா!

July 5, 2026 4:25 pm
1990 ஆம் ஆண்டு இடம்பெயர்வின் அடையாளமாகத் திகழும் அல்-காசீமி சிட்டி: 19ஆவது ஆண்டு நினைவு விழா!
1990ஆம் ஆண்டு வடக்கில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள், புத்தளம் மற்றும் மன்னார் உள்ளிட்ட பகுதிகளில் குடியேற்றத் திட்டங்களின் கீழ் புதிய வாழ்க்கையினை ஆரம்பித்தனர்.

அவ்வாறான குடியேற்றத் திட்டங்களில் ஒன்றான புத்தளத்தில் உருவாக்கப்பட்ட அல்-காசீம் சிட்டியானது, இன்று முன்னேற்றமிக்க குடியிருப்புப் பகுதியாக வளர்ச்சியடைந்துள்ளது.

ஒருகாலத்தில் வெறிச்சோடி இருந்த நிலப்பரப்பில் சுமார் 500 வீடுகளோடும், ஆரம்பிக்கப்பட்ட குறித்த கிராமம், தற்போது கல்விமான்கள், உலமாக்கள் மற்றும் தொழில்முனைவோர், பல்வேறு துறைகளில் சாதனை படைத்த சமூகத்தினரை உருவாக்கிய சிறந்த குடியிருப்புப் பகுதியாக திகழ்கின்றது.

அல்-காசீம் சிட்டியின் 19ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, "காசீமியா நினைவு நாள்" நிகழ்வு கடந்த வியாழக்கிழமை (02) அல்-காசீம் சிட்டி பொது விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வின் போது, இக்கிராமம் உருவாகுவதற்கு பெரும் பங்களிப்பை வழங்கிய வெளிநாட்டு நன்கொடையாளர் சுல்தான் பின் அல்-காசிமி அவர்களுக்கு நன்றியை வெளிப்படுத்தும் வகையில் விசேட துஆ பிரார்த்தனையும், கலை மற்றும் கலாசார நிகழ்ச்சிகளும் நடைபெற்றன இக்கிராம மாணவர்களினால் அரங்கேற்றப்பட்டது.

இந்த நிகழ்வில், அல்-காசீம் சிட்டி உருவாக்கத்திற்கான அடித்தளத்தை அமைப்பதில் முக்கிய பங்காற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், அதிதிகளாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தாஹிர் மரைக்கார், பிரதேச மற்றும் நகர சபை உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் என பலரும் கலந்துகொண்டனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now