New Updates! Fresh news just arrived.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர...

News

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளராக ஆல்தீன் அமீர் நியமனம்!

March 3, 2026 4:59 pm
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளராக ஆல்தீன் அமீர் நியமனம்!
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி ஆல்தீன் அமீர் இன்று (03) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

மூன்று தசாப்தங்களுக்கு மேலாக மூவின இளைஞர் யுவதிகளின் கல்வி, கலை, கலாசாரம் மற்றும் விளையாட்டு துறைகளில் தலைமைத்துவத்தை சிறப்பாக முன்னெடுத்து வந்த இவர், இதற்கு முன்னர் கிழக்கு மாகாண பிரதிப் பணிப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

இறக்காமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆல்தீன் அமீர், இளைஞர்களின் திறன் மேம்பாடு, சமூக ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவ வளர்ச்சி ஆகிய துறைகளில் பல்வேறு முன்னோடி திட்டங்களை நடைமுறைப்படுத்தி பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

குறிப்பாக, பின்தங்கிய பிரதேச இளைஞர்களில் கல்வி மற்றும் தொழில் பயிற்சிகளின் ஊடாக முன்னேற்றம் அடையச் செய்தமை குறிப்பிடத்தக்கது.

இவரது நியமனமானது கிழக்கு மாகாண இளைஞர் சமூகத்தில் புதிய எதிர்பார்ப்பினை உருவாக்கியுள்ளது. இளைஞர் சக்தியை தேசிய முன்னேற்றத்த்தோடு, இணைக்கும் பல்வேறு திட்டங்கள் அவரது தலைமையில் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now