கொழும்பு தேசிய வைத்தியசாலை பகுதியில் பாதுகாப்பு குறித்து ...
News
கொழும்பு தேசிய வைத்தியசாலை பகுதியில் பாதுகாப்பு குறித்து எச்சரிக்கை!
கொழும்பு தேசிய வைத்தியசாலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் போதைப்பொருள் பாவனை மற்றும் பல்வேறு குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுவதால், வைத்தியசாலைக்கு வருகை தரும் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நொரிஸ் கெனல் வீதியில், வைத்தியசாலைக்கு எதிர்ப்புறமாக அமைந்துள்ள பொதுக் கழிப்பறையைச் சுற்றியுள்ள பகுதி இரவு நேரங்களில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் கூடாரமாக மாறுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கொழும்பு மாநகர சபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் குறித்த கழிப்பறை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதியில் இரவு வேளைகளில் போதிய மின்விளக்கு வசதிகள் இல்லாததால், அப்பகுதி இருள் சூழ்ந்த நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக இரவு நேரங்களில் அப்பகுதி வழியாகச் செல்லும் பொதுமக்கள் தங்களது பாதுகாப்பு குறித்து அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அப்பகுதியில் கூர்மையான ஆயுதங்களைக் காண்பித்து அச்சுறுத்துதல், பணம் பறித்தல் மற்றும் தாக்குதல் போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெறுவதாகவும் குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன.
அத்துடன், அங்கு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் சிலரிடமும், கடைகளுக்கு வரும் பொதுமக்களிடமும் அச்சுறுத்தல் மூலம் பணம் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் பணியாற்றும் பாதுகாப்பு ஊழியர்களுக்கும் போதைப்பொருளுக்கு அடிமையான சிலரால் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
அப்பகுதியில் சிறு வியாபாரங்களில் ஈடுபடும் பெண்களிடம் இருந்து அவர்கள் ஈட்டும் சிறிய அளவிலான வருமானத்தையும் அச்சுறுத்தி பெற்றுக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘பாபா’ என அழைக்கப்படும் போதைப்பொருள் விற்பனையாளர் ஒருவர் பொலிஸ் அதிகாரியைப் போன்று நடித்து பொதுமக்களிடம் பணம் பெறுவதுடன், கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்தி அச்சுறுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, தேசிய வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெறுவதாகக் கூறப்படும் மற்றுமொரு மோசடி தொடர்பிலும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நன்கொடை வழங்குவதாகக் கூறி பொதுமக்களிடம் பணம் வசூலிக்கும் சிலர், அவ்வாறு பெறப்படும் பணத்தை போதைப்பொருள் கொள்வனவுக்குப் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இவ்வாறு பணம் சேகரித்ததாகக் கூறப்படும் பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இந்த நடவடிக்கை நீண்டகாலமாக இடம்பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, வைத்தியசாலை வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பைக்கெட் திருட்டு சம்பவங்களும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்களால் தொலைக்கப்பட்ட அடையாள அட்டைகள் மற்றும் பணப்பைகள் வைத்தியசாலை பொலிஸ் காவலரணில் அதிகளவில் சேர்ந்து கிடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் போக்குவரத்து அதிகாரிகள் தங்களது கடமைகளை முறையாக முன்னெடுத்து வருகின்ற போதிலும், தேசிய வைத்தியசாலையைச் சூழவுள்ள பகுதிகளின் ஒட்டுமொத்த பாதுகாப்பு தொடர்பில் மேலும் நடவடிக்கைகள் அவசியமாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, இந்த நிலைமைக்கு விரைவான தீர்வொன்றை ஏற்படுத்துவதற்காக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய நேரடியாக கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.