அமெரிக்காவிலிருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் இடைநி...
News
அமெரிக்காவிலிருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் இடைநிறுத்தம்
அமெரிக்காவின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையங்களில் (Air Traffic Control Centers) ஏற்பட்ட பாரிய தகவல் தொடர்பாடல் கோளாறு காரணமாக, நாடளாவிய ரீதியில் அனைத்து விமான நிலையங்களிலிருந்தும் விமானங்கள் புறப்படுவதற்கு அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA) நேற்று (13) தடை விதித்தது.
2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பின்னர், அமெரிக்கா முழுவதும் விமானப் போக்குவரத்து இவ்வாறு முழுமையாக நிறுத்தப்பட்ட இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
விமானப் போக்குவரத்துக் கண்காணிப்புச் சேவையான 'ஃபிளைட் அவேர்' (FlightAware) தரவுகளின்படி, இந்தத் தடையினால் சுமார் 7,000 விமானங்களின் சேவைகள் தாமதமாகின அல்லது இரத்துச் செய்யப்பட்டன.
வானில் பறந்து கொண்டிருந்த விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கப்பட்ட போதிலும், தரையிலிருந்த எந்தவொரு விமானமும் புறப்பட அனுமதிக்கப்படவில்லை.
கிழக்கு நேரப்படி மாலை 3.54 அளவில் (GMT 20.54) இந்த நாடளாவிய விமானத் தடை அறிவிக்கப்பட்டது.
இதற்குச் சற்று முன்னதாக, சிகாகோ நகரில் ஏற்பட்ட தகவல் தொடர்பாடல் கோளாறு காரணமாக அங்கு விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது.
இது குறித்து சமூக வலைத்தளமான எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க போக்குவரத்துச் செயலாளர் ஷோன் டஃபி (Sean Duffy), அனைத்து விமானப் பாதை கட்டுப்பாட்டு மையங்களையும் பாதித்த தொடர்பாடல் சிக்கல் காரணமாக இந்தத் தடை விதிக்கப்பட்டதாகவும், தொழில்நுட்ப வல்லுநர்கள் இதனைச் சீர்செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
விமானத் தடை எப்போது நீக்கப்படும் என்பது குறித்து உடனடியாக அறிவிக்கப்படாவிட்டாலும், சில இடங்களில் தொடர்பாடல் கோளாறுகள் சீராகி வருவதற்கான ஆரம்பகட்ட அறிகுறிகள் தென்படுவதாக விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இந்தத் தடை மாலை வேளை வரை நீடித்தால், விமான நிறுவனங்களின் சேவைகளை மீண்டும் வழமைக்குக் கொண்டுவர வார இறுதி நாட்கள் வரை ஆகலாம் என விமானப் போக்குவரத்து ஆய்வாளர் ரொபர்ட் மான் தெரிவித்துள்ளார்.
கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதமும் இதுபோன்றதொரு நாடளாவிய தடை விதிக்கப்பட்டு, இரண்டு மணி நேரத்திற்குள் நீக்கப்பட்டிருந்தது.
பழமையான உட்கட்டமைப்பு, உபகரணக் கோளாறுகள் மற்றும் விமானக் கட்டுப்பாட்டாளர்களின் பற்றாக்குறை ஆகியவற்றால் அமெரிக்காவின் விமானப் போக்குவரத்துக் கட்டமைப்பு தொடர்ந்து நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றது.
கடந்த 2025 ஜனவரியில் ரொனால்ட் ரீகன் வொஷிங்டன் தேசிய விமான நிலையத்தில் நடுவானில் இடம்பெற்ற விமான விபத்தில் 67 பேர் உயிரிழந்திருந்தனர்.
இந்தநிலையில், பழமையான விமான நிலையங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளை நவீனமயமாக்க மேலதிகமாக 30.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்குமாறு வெள்ளை மாளிகையும் போக்குவரத்துத் திணைக்களமும் நேற்று காங்கிரஸிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
இதேவேளை, ஐரோப்பா முழுவதும் அண்மையில் பயணிகள் விமானங்களுக்கு விடுக்கப்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல்களைத் தொடர்ந்து உலகளாவிய ரீதியில் விமானப் பாதுகாப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எனினும், அமெரிக்காவில் ஏற்பட்ட இந்தத் தொடர்பாடல் கோளாற்றுக்கு சைபர் தாக்குதலோ அல்லது அந்த மிரட்டல்களோ காரணம் என்பதற்கான எவ்வித உடனடி ஆதாரங்களும் இல்லை.
இதற்கிடையில், அமெரிக்க தேசிய வானிலை சேவையும் (US National Weather Service) நேற்று நாடளாவிய ரீதியில் இணைய மற்றும் தொடர்பாடல் சிக்கல்களை எதிர்கொண்ட போதிலும், இவ்விரு சம்பவங்களுக்கும் இடையே தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.