17 இலட்சம் ரூபாய் நிதி முறைகேடு குற்றச்சாட்டு: நால்வருக்க...
News
17 இலட்சம் ரூபாய் நிதி முறைகேடு குற்றச்சாட்டு: நால்வருக்கும் மீண்டும் விளக்கமறியல்!
நுகர்வோர் கூட்டுறவு அபிவிருத்திச் சங்கத்திற்கு சொந்தமான 17 இலட்சம் ரூபாய் நிதியினை முறைகேடாகப் பயன்படுத்தியதாகச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட, அதனுடைய முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியுள்ளிட்ட நால்வரை எதிர்வருகின்ற 23ஆம் திகதி வரைக்கும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, குறித்த சந்தேகநபர்களுக்கான பிணை உத்தரவு குறித்து பரிசீலிப்பதற்காக நேற்று (21) இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், பிணை தொடர்பான உத்தரவு பிறிதொரு தினத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்து நீதவான் குறித்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பு நிதிக் குற்ற விசாரணைப் பிரிவால் கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபர்கள், முன்னதாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதினைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
நுகர்வோர் கூட்டுறவு அபிவிருத்திச் சங்கத்தில் பணியாற்றி இருந்த முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியுள்ளிட்ட நால்வருமே இவ்வாறு மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.