New Updates! Fresh news just arrived.

அரசுப் பணத்தைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு: ஜாலிய...

News

அரசுப் பணத்தைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு: ஜாலிய விக்ரமசூரியவிற்கு மீண்டும் பிடியாணை

July 22, 2026 2:23 pm
அரசுப் பணத்தைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு: ஜாலிய விக்ரமசூரியவிற்கு மீண்டும் பிடியாணை
அரசுப் பணத்தைத் தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ள அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (22) மீண்டும் பிடியாணை பிறப்பித்துள்ளது.

குறித்த வழக்கு தொடர்பாகச் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று எதிர்வரும் டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி நீதிமன்றத்தில் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசந்த அமரசேன, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now