பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு: தேசிய மக்கள் சக்...
News
பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு: தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்கமறியல்!
இளம் பெண்ணொருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பொல்கஹவெல பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை எதிர்வரும் நவம்பர் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொல்கஹவெல நீதவான் நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபருக்குச் சொந்தமான பிஸ்கட் உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரியும் 20 வயதுடைய இளம் பெண் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், பொதுஹெர பொலிஸாரால் நேற்று (21) மாலை இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, இருதரப்பு கருத்துக்களையும் பரிசீலித்த நீதவான் உதும்பரா தசநாயக்க இந்த விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பித்தார்.
மேலும், குறித்த சந்தேகநபரான பிரதேச சபை உறுப்பினர், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் பொல்கஹவெல பிரதேச சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொதுஹெர பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.