கடமை நேரத்தில் பிரதேச செயலாளரை அச்சுறுத்திய குற்றச்சாட்டு...
News
கடமை நேரத்தில் பிரதேச செயலாளரை அச்சுறுத்திய குற்றச்சாட்டு: பெண் அரச உத்தியோகத்தர் கைது - மயங்கி விழுந்து வைத்தியசாலையில் அனுமதி!
நிந்தவூர் பிரதேச செயலாளரினை கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் பெண் அரச உத்தியோகத்தர் ஒருவரை நிந்தவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, கைது செய்யப்பட்ட வேளையில் அதிர்ச்சியினால் மயங்கி விழுந்தமையால் பொலிஸ் பாதுகாப்போடு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேச செயலாளரினை அவரது கடமையின் போது குறித்த பெண் உத்தியோகத்தர் காணொளி (Video) எடுத்து அச்சுறுத்தல் விடுத்ததோடு, அக்காணொளியை சமூக வலைத்தளமான முகநூலிலும் பதிவேற்றம் செய்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் நிந்தவூர் பிரதேச செயலக நிர்வாகத்தால் நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்த, செவ்வாய்க்கிழமை (18) மாலை வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காகக் குறித்த பெண் அரச உத்தியோகத்தர் நிந்தவூர் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
விசாரணைகளின் பின்னர் பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்ட வேளையில், திடீரென மயக்கமுற்று கீழே விழுந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அவர் உடனடியாக அருகிலுள்ள நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு அவசர சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, தற்போது அவருக்குப் பெண் பொலிஸாரின் பாதுகாப்போடு, வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதுடன், நிந்தவூர் பொலிஸாரினால் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.
பாறுக் ஷிஹான்