அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கு பிரதிவாதிகளின் உறவினர்க...
News
அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கு பிரதிவாதிகளின் உறவினர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு
பாராளுமன்ற உறுப்பினரான அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் கொலை வழக்கின் தீர்ப்புக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பிரதிவாதிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளார்.
இன்று (23) இது தொடர்பில் ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் ஒருவருடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
உயர்நீதிமன்றத்திடம் இருந்து நியாயமான தீர்ப்பினை எதிர்பார்ப்பதாக தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரினுடைய மனைவி தெரிவித்தார்.
நாங்கள் இன்று ஜனாதிபதியினை சந்தித்து, எமக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி குறித்து எழுத்து மூலமாக கடிதமொன்றினை கையளிப்பதற்காக வந்தோம்.
அத்தோடு, எமது வழக்கு தொடர்பில் மேன்முறையீடு ஒன்றினையும் சமர்ப்பிக்கவுள்ளோம். ஐந்து பேர் கொண்ட நீதியரசர்கள் குழாமிடம் இருந்து உண்மையில் ஒரு நியாயமான தீர்ப்பினை எதிர்பார்க்கின்றோம்.
ஜனாதிபதியிடமும் எமக்கு நீதியினை வழங்குமாறு கேட்டுக்கொண்டோம். தற்போது நாம் மிகவும் நிர்க்கதிக்குள்ளாகி உள்ளோம்.
பிள்ளைகளோடு, பல தாய்மார்கள் இருக்கின்றார்கள். மூவரடங்கிய மேல்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை தலைவணங்கி ஏற்றுக்கொள்கின்றோம்.
எனினும், ஒரு நீதிபதி இவர்களினை குற்றமற்றவர்கள் என விடுவித்தார்.
அதுதான் எமக்கு ஒரு நம்பிக்கை இருக்கின்றது. இவர்களுக்காக இன்னும் ஒரு சந்தர்ப்பம் இருப்பதாக கருதுகின்றோம். அந்த சந்தர்ப்பத்தையே நாம் பயன்படுத்துகின்றோம். மேன்முறையீடு செய்து குறித்த 12 பேரையும் விடுவிப்பதே எமது ஒரே எதிர்பார்ப்பாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.