New Updates! Fresh news just arrived.

மியாமி விமான நிலையத்தில் அமேசன் சரக்கு விமானம் விபத்து – ...

News

மியாமி விமான நிலையத்தில் அமேசன் சரக்கு விமானம் விபத்து – 5 பேர் பலி!

September 7, 2026 6:52 am
மியாமி விமான நிலையத்தில் அமேசன் சரக்கு விமானம் விபத்து – 5 பேர் பலி!
மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசன் நிறுவனத்துக்குச் சொந்தமான சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவத்தில் மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர்ட்டோ ரிகோவின் சான் ஜுவான் நகரிலிருந்து புறப்பட்ட விமானம், உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2 மணியளவில் விமான நிலைய ஓடுபாதையை விட்டு விலகியுள்ளது. பின்னர் விமான நிலையத்திலுள்ள ஏனைய வர்த்தக நிறுவனங்கள் பயன்படுத்தும் வீதிக்குள் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது வீதியில் பயணித்துக் கொண்டிருந்த சில வாகனங்களுடன் விமானம் மோதியதைத் தொடர்ந்து தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் உயிரிழந்த ஐவரும் விமானத்தில் பயணித்தவர்களா அல்லது விமானம் மோதிய வாகனங்களில் இருந்தவர்களா என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

சம்பவத்தைத் தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட அவசரகால மீட்புப் பணியாளர்கள் அங்கு விரைந்து சென்று மீட்பு மற்றும் அவசர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now