New Updates! Fresh news just arrived.

அம்பாரை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல். ...

News

அம்பாரை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல். தௌபீக் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக பதவியுயர்வு!

June 1, 2026 6:41 pm
அம்பாரை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல். தௌபீக் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக பதவியுயர்வு!
அம்பாரை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தரான ஏ.எல். தௌபீக் அவர்கள், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினுடைய சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக பதவியுயர்வு பெற்றுள்ளார்.

2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில், கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இவருக்கான பதவியுயர்வு நியமனக் கடிதமானது, இன்று (01) கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர்ரான பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் பீ. வாகீசன், கல்வி மற்றும் பண்பாட்டலுவல்கள் அமைச்சினுடைய செயலாளர் கே. குணநாதன், பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்திருந்தனர்.

இதன்படி, கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் கடமையாற்றும் சுமார் 45 கலாசார உத்தியோகத்தர்களில், விண்ணப்பிக்கத் தகுதியுடைய தரம் I கலாசார உத்தியோகத்தர்களிடமிம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில், கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால்வால் நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டு, அதன் முடிவில், கிழக்கு மாகாணத்திலிருந்து இரு அதிகாரிகள் மட்டுமே சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவராக அம்பாரை மாவட்டத்தினை சேர்ந்த ஏ.எல். தௌபீக் அவர்கள் தெரிவாகியுள்ளதோடு, மற்றொருவராக திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஐ.ஆர்.ஜி. நிமல்சிறி பண்டார அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பதவியுயர்வு, ஏ.எல். தௌபீக் அவர்களின் நீண்டகால கலாசாரப் பணிகளுக்கான அங்கீகாரமாகவும், அம்பாரை மாவட்டத்திற்கு கிடைத்துள்ளதிருக்கும் பெருமையாகவும் கருதப்படுகின்றது.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now