New Updates! Fresh news just arrived.

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்!

News

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்!

September 7, 2026 4:26 pm
அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்!
கைதான மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை (8) வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 31 ஆம் திகதி, மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்தின் அலுவலகத்திற்கு சென்று, அங்குள்ள அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் அவர் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டிருந்தார்.

பின்னர் சந்தேகநபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை நாளை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அதேநேரம் அவருக்கு எதிராக வேறு இரண்டு வழக்குகளின் கீழ் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

குறித்த வழக்குகளில் அவருக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now