New Updates! Fresh news just arrived.

“டெங்கற்ற கிழக்கு” வேலைத்திட்டத்திற்கு அம்பாறை மாவட்ட அரச...

News

“டெங்கற்ற கிழக்கு” வேலைத்திட்டத்திற்கு அம்பாறை மாவட்ட அரச அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்குங்கள்: பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கோரிக்கை!

July 29, 2026 7:49 pm
“டெங்கற்ற கிழக்கு” வேலைத்திட்டத்திற்கு அம்பாறை மாவட்ட அரச அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்குங்கள்: பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கோரிக்கை!
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று கிழக்கு மாகாண ஆளுநரும், அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சருமான வசந்த பியதிஸ்ஸ ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது டெங்கு தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதில் கருத்துத் தெரிவித்த அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை, எமது ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் வழிகாட்டலில், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர் காங்கிரஸின் ‘டெங்கற்ற கிழக்கு’ வேலைத்திட்டம் கடந்த 26ஆம் திகதி சம்மாந்துறைப் பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

எதிர்வரும் 01.08.2026 அன்று இறக்காமம் பிரதேசத்திலும், 02.08.2026 அன்று அட்டாளைச்சேனை, ஒலுவில் மற்றும் பாலமுனை பிரதேசங்களிலும், 09.08.2026 அன்று பொத்துவில் பிரதேசத்திலும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

எனவே, எமது அம்பாறை மாவட்ட மக்களை டெங்கு நோயிலிருந்து பாதுகாக்கும் இத்திட்டத்திற்கு அம்பாறை மாவட்ட அரசு அதிகாரிகள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

கே எ ஹமிட்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now