New Updates! Fresh news just arrived.

சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவொன்று நியமித்து அதிவிச...

News

சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவொன்று நியமித்து அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

June 23, 2026 3:14 pm
சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவொன்று நியமித்து அதிவிசேட வர்த்தமானி  வெளியீடு!
அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, ஜனாதிபதியினால் 15 உறுப்பினர்களைக் கொண்ட சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

தெல்கே அசோக பீரிஸின் தலைமையில் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அரசு அதிகாரிகள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குதல், அரசு ஊழியர்களின் தொழில்சார் நிபுணத்துவத்தை மேம்படுத்துதல் மற்றும் புதிய தொழில்நுட்ப மற்றும் உலகளாவிய போக்குகளுக்கு ஏற்ப பொதுச் சேவையில் எவ்வாறான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்த பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்வதே இந்த ஆணைக்குழுவை நிறுவியதன் நோக்கமாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசியலமைப்பின் 33ஆவது உறுப்புரையின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now