New Updates! Fresh news just arrived.

மலையக மண்ணிலிருந்து சர்வதேச கால்பந்து நடுவர்; நுவரெலியாவு...

News

மலையக மண்ணிலிருந்து சர்வதேச கால்பந்து நடுவர்; நுவரெலியாவுக்கு பெருமையைத் தேடித் தந்த சூடீன்

November 19, 2026 10:55 pm
மலையக மண்ணிலிருந்து சர்வதேச கால்பந்து நடுவர்; நுவரெலியாவுக்கு பெருமையைத் தேடித் தந்த சூடீன்
சர்வதேச கால்பந்துப் போட்டியொன்றில் நடுவராகக் கடமையாற்றும் வாய்ப்பைப் பெற்று, நுவரெலியா மண்ணைச் சேர்ந்த டி.எப். சூடீன் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

நுவரெலியா கால்பந்து துறையிலிருந்து சர்வதேச தரத்திலான நடுவர் ஒருவர் உருவாகியிருப்பது, கால்பந்து சங்கத்திற்கு மட்டுமன்றி முழு பிரதேசத்திற்கும் கிடைத்த பெருமையாகும் என சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

டி.எப். சூடீன் அவர்களின் அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் தொழில்முறை திறமையே இந்தச் சாதனைக்கான முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச கால்பந்துப் போட்டியொன்றில் நடுவராகப் பணியாற்றும் வாய்ப்பைப் பெறுவது சாதாரணமான வெற்றியல்ல என தெரிவித்த அவர், எதிர்காலத்தில் நுவரெலியாவிலிருந்து மேலும் பல சர்வதேச தரத்திலான வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் நடுவர்களை உருவாக்க இத்தகைய சாதனைகள் பெரும் ஊக்கமாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், டி.எப். சூடீனுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார்.

90 ஆண்டுகளுக்கும் மேலான நுவரெலியா கால்பந்து வரலாற்றில் புதிய பெருமையைப் பதித்துள்ள சூடீனின் சாதனை, மத்திய மலைநாட்டின் விளையாட்டுத் திறமைகளை சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்ல முடியும் என்பதை எடுத்துக்காட்டுவதுடன், நுவரெலியா கால்பந்தின் எதிர்காலத்திற்கும் புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now