New Updates! Fresh news just arrived.

சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் குறித்து வெளியான அறிவிப...

News

சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் குறித்து வெளியான அறிவிப்பு

March 4, 2026 10:49 am
சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் குறித்து வெளியான அறிவிப்பு
2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (G.C.E. O/L) பரீட்சையின் பெறுபேறுகள் ஏப்ரல் 30 ஆம் திகதிக்குப் பின்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையர் நாயகம் A.K.S. Indika Kumari Liyanage தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 12 ஆம் திகதி முதல் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முதல் கட்ட திருத்தும் பணிகள் மார்ச் 12 முதல் 23 வரை நடைபெறும். இரண்டாம் கட்டம் ஏப்ரல் 01 முதல் 10 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், செயல்முறை (Practical) பரீட்சைகள் ஏப்ரல் 22 முதல் 30 வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

செயல்முறை பரீட்சைகள் நிறைவடைந்ததன் பின்னர், பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதி திகதி குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என ஆணையர் நாயகம் தெரிவித்தார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now