New Updates! Fresh news just arrived.

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் அறிவிப்பு - G...

News

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் அறிவிப்பு

March 27, 2026 10:58 am
உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் அறிவிப்பு
2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகள் சிங்கள மற்றும் தமிழ்ப் புத்தாண்டுக்கு முன்பு வெளியிடக்கூடியதாக இருக்குமென்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.

பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் தேவையான செயல்முறைகள் தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

நவம்பர் 10ஆம் திகதி ஆரம்பமான உயர்தர பரீட்சையின் சில பாடங்கள் தித்வா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு ஜனவரி 12 முதல் 20 வரை மீண்டும் நடத்தப்பட்டன. இதற்கமைய அனைத்து பரீட்சைகளும் 16ஆம் திகதி நிறைவடைந்தன.

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சுமார் மூன்று இலட்சம் பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உயர் தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now