பாடசாலை நிர்வாக செயற்பாடுகள் மற்றும் கற்றல்- கற்பித்தல் ச...
News
பாடசாலை நிர்வாக செயற்பாடுகள் மற்றும் கற்றல்- கற்பித்தல் செயற்பாடுகளினை முன்னெடுத்தல் தொடர்பிலான அறிவிப்பு!
உலகளாவிய ரீதியில ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலைமையில் பாடசாலை நிர்வாக செயற்பாடுகள் மற்றும் கற்றல்- கற்பித்தல் செயற்பாடுகளினை முன்னெடுப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.
சகல பாடசாலைகளும் வாரங்களில் நான்கு நாட்கள் மட்டுமே நடாத்தப்பட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மீண்டும் அறிவித்தல் வழங்கப்படும் வரை சகல புதன் கிழமைகளும் பாடசாலை விடுமுறை தினமாகும். ஒவ்வொரு புதன்கிழமையும் வீட்டில் உள்ள மாணவர்கள் சுயகற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காக பொருத்தமான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ள அனைத்து அதிபர்களும் நடவடிக்கை எடுத்தல் வேண்டும் எனவும் பாடசாலைகளின் பாடங்களைப் பூர்த்தி செய்வதற்கான காலம் வரையறைக்குட்பட்டதாக இருப்பதால் பாடசாலை மற்றும் வெளிநிறுவனங்களால் பாடசாலைகளில் செயற்படுத்தப்படும் நிகழ்ச்சிகள் அல்லது விழாக்களுக்காக பாடசாலை நேரத்தை பயன்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கள்ளப்பட்டுள்ளது,
அத்தோடு, பாடசாலைகளின் நடைபெறவிருக்கும் விழா அல்லது நிகழ்ச்சிகளுக்கு குறைந்த எரிபொருள் பாவனை தவிர்ந்த ஏனைய உயர்மட்ட எரிபொருள் பயன்படுத்தப்படும் வாகனப்பேரணிகள் போன்றவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படல் வேண்டும் எனவும் பாடசாலைகளில் மாணவர்களின் பங்குபற்றலுடன் திட்டமிடப்பட்ட கல்விச் சுற்றுலாக்கள் மற்றும் எதிர்காலத்தில் திட்டமிடப்படவுள்ள கல்விச்சுற்றுலாககள் மீண்டும் அறிவித்தல் வழங்கப்படும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படல் வேண்டும்எனவும் குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்காணும் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப இக்காலகட்டத்தில் கற்றற்செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாதவண்ணம் தொடர்ந்தும் உங்கள் ஆதரவை எதிர்பார்ப்பதுடன் தற்போதய சூழ்நிலை சீரடைந்ததும் தொடர்ச்சியாக பாடசாலைகளை நடாத்திச் செல்வது தொடர்பான அறிவுறுத்தல்கள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.