New Updates! Fresh news just arrived.

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லாஹ் அலி கமெனியின் இறுதி...

News

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லாஹ் அலி கமெனியின் இறுதிச் சடங்கு தொடர்பில் அறிவிப்பு!

June 14, 2026 3:48 pm
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லாஹ் அலி கமெனியின் இறுதிச் சடங்கு  தொடர்பில் அறிவிப்பு!
அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டு நான்கு மாதங்களுக்கு பின்னர், ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லாஹ அலி கமெனிக்கான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இறுதிச் சடங்கு எதிர்வரும் ஜூலை மாதம் 9 ஆம் திகதி நடைபெறும் என ஈரான் அரசு ஊடகங்கள் அறிவித்துள்ளன.

இதன்படி, 86 வயதான அயதுல்லாஹ அலி கமெனி, கடந்த பெப்ரவரி மாதம் 28 திகதி அன்று ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் முதல் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

அவர் 36 ஆண்டுகளாக ஈரான் இஸ்லாமியக் குடியரசை வழிநடத்தினார்.

இந்தத் தாமதம், தெஹ்ரானின் அரசியல் மாற்றத்தின் காலக்கெடு மற்றும் வாஷிங்டனுடனான பேச்சுவார்த்தைகளின் நிலை குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஈரானிய அரசு ஊடகங்களின்படி,

இறுதிச் சடங்குகள் ஜூலை 4 அன்று தெஹ்ரானில் தொடங்கும். இறுதி நல்லடக்கம் ஜூலை 9 அன்று, அவரின் சொந்த ஊரான வடகிழக்கு ஈரானில் உள்ள மஷ்ஹத்தில் உள்ள புகழ்பெற்ற இமாம் ரெஸா தர்காவில் நடைபெறும். கமெனியின் மரணத்திற்கு 130 நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது நவீன ஈரானிய வரலாற்றில் ஒரு முக்கிய மதத் தலைவரின் நல்லடக்கத்தில் ஏற்பட்ட மிகவும் அசாதாரணமான தாமதங்களில் ஒன்றாகும்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now