New Updates! Fresh news just arrived.

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு! - Gur...

News

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

August 6, 2026 2:04 pm
பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!
2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறை தொடர்பாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான முதலாம் கட்டம் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு நாளை (07) ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.

முஸ்லிம் பாடசாலைகளுக்கு செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி நிறைவடைகிறது.

அனைத்துப் பாடசாலைகளுக்கும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதுடன், டிசம்பர் 4 ஆம் திகதி மூன்றாம் தவணை நிறைவடைகிறது.

2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர)ப் பரீட்சை ஒகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 5 வரை நடத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now