வட்டு இந்து கல்லூரியின் வருடாந்த பொது கூட்டமும் புதிய நிர...
News
வட்டு இந்து கல்லூரியின் வருடாந்த பொது கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும்!
வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் வருடாந்த பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகத் தெரிவும் இன்றையதினம் கல்லூரியின் சோமசுந்தரப்புலவர் அரங்கில், முன்னைநாள் பழைய மாணவர் சங்க தலைவர் விஷ்ணுதாஸ் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, சென்ற கூட்ட அறிக்கையானது முன்னாள் செயலாளர் கஜேந்திரனால் வாசிக்கப்பட்டது. பின்னர் பொருளாளரான ப.கஜமுகனால் கணக்கறிக்கை வாசிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சங்கத்தின் கடந்தகால செயற்பாடுகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
பின்னர் கல்லூரியின் முதல்வர் சி.தனஞ்சயன், கல்லூரியின் பழைய மாணவரான வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் அற்புதராஜ் ஆகியோரது உரைகள் இடம்பெற்றது. தொடர்ந்து, சங்கத்தின் கடந்த கால செயற்பாடுகள் குறித்து கருத்துகள் கேட்கப்பட்டன.
அதன்பின்னர் பழைய மாணவர் சங்கத்தின் புதிய நிர்வாக தெரிவு இடம்பெற்றது. இதன்போது ஜேசுதாசன் ரெறன்சன் தலைவராகவாம், குலசூரியன் சூரியகாந்தன் செயலாளராகவும், சி.கோணேஷ்வரன் பொருளாளராகவும், புவனேஸ்வரன் கஜிந்தன் பத்திராதிபராகவும் தெரிவு செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து உபதலைவர், துணைத் தலைவர், உப செயலாளர், இணை பத்திராதிபர் என்பவற்றுடன் 11 நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து புதிய தலைவரின் உரை இடம்பெற்றதை தொடர்ந்து புதிய செயலாளரின் நன்றியுரை இடம்பெற்றது. இறுதியாக கல்லூரி கீதத்துடன் கூட்டமானது நிறைவுக்கு வந்தது.
பு.கஜிந்தன்