New Updates! Fresh news just arrived.

அனோஜனின் மரண தண்டனை சவூதி அரேபிய உச்ச நீதிமன்றத்தால் இரத்...

News

அனோஜனின் மரண தண்டனை சவூதி அரேபிய உச்ச நீதிமன்றத்தால் இரத்து: பிரதி வெளிவிவகார அமைச்சர்!

October 14, 2026 11:29 am
அனோஜனின் மரண தண்டனை சவூதி அரேபிய உச்ச நீதிமன்றத்தால் இரத்து: பிரதி வெளிவிவகார அமைச்சர்!
இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சவூதி அரேபிய உச்ச நீதிமன்றம் இரத்து செய்துள்ளதாக இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா அறிவித்துள்ளார்.

சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் 13, 2026 அன்று மரண தண்டனையை விதிக்கப்பட்டடிருந்த தீர்ப்பை சவூதி உச்ச நீதிமன்றமானது இரத்து செய்திருப்பதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான இராஜதந்திர மற்றும் சட்டப்பூர்வ முயற்சிகளின் காரணமாகவே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும், இது அனோஜன் சிவராசாவுக்குக் கிடைத்த ஒரு பெரிய நிம்மதி என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விவகாரத்தில் ஒத்துழைப்பு வழங்கிய சவூதி அரேபிய அரசுக்கு பிரதி அமைச்சர் தனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

மேலும், இலங்கைத் தூதுவர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மற்றும் அதிகாரிகள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், அத்துடன் இலங்கை மற்றும் சவூதி சட்டக் குழுவினர் ஆகியோர் மேற்கொண்ட முயற்சிகளுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

சிவராசாவின் சட்டத்துறை விவகாரத்தில் இந்த அறிவிப்பு ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்தாலும், அவரது தற்போதைய சட்ட நிலை மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து மேலதிக விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now