New Updates! Fresh news just arrived.

போதைப்பொருள் சந்தேகத்தில் மற்றொரு படகும் மீட்பு!

News

போதைப்பொருள் சந்தேகத்தில் மற்றொரு படகும் மீட்பு!

March 16, 2026 11:18 am
போதைப்பொருள் சந்தேகத்தில் மற்றொரு படகும் மீட்பு!
பேருவளை பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்தாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு பலநாள் மீன்பிடி படகையும் கடற்படையினரால் கண்டுபிடித்திருப்பதாக பாதுகாப்பு பிரதி அமைச்சரான அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

தேவேந்திரமுனைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டிருந்த பலநாள் மீன்படி படகினை இன்று (16) திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில், அது தொடர்பிலான விடயங்க;ளினை தெளிவுப்படுத்திய , அவர் இதனை குறிப்பிட்டுள்ளார் .

குறித்த படகு தற்போது கரைக்கு கொண்டு வரப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இந்த நேரத்தில் கடற்படையினரினுடைய நடவடிக்கையில், போதைப்பொருட்களைளினை நாட்டுக்குள் கொண்டு வந்த மற்றுமொரு மீன்பிடி படகினையும் சற்று முன்னர் கண்டுபிடித்துள்ளனர்.

அதிலுள்ள போதைப்பொருளினுடைய அளவை இப்போதே சரியாகக் கூற முடியாது. படகை கரைக்கு கொண்டு வந்ததன் பின்னரே அது குறித்துத் தெரிவிக்க முடியும்.

இதற்கு முன்பும் கடந்த வாரத்தில் தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்திய 3 பலநாள் மீன்பிடி படகுகளினை கடற்படையினர் கண்டுபிடித்திருந்தனர்.

மேலும், இவ்ஆண்டில் மட்டும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த 7 பலநாள் மீன்பிடி படகுகளினை கடற்படையினர் சுற்றிவளைத்திருப்பதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now