முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிரான மற்றொரு...
News
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிரான மற்றொரு வழக்கு: மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை!
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்ற இலக்கம் 11 இல் விசாரிக்கப்பட்டு வரும் மற்றொரு இலஞ்ச வழக்கின் அடுத்துக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதைத் தடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சரண குணவர்தன தனது சட்டத்தரணிகள் ஊடாக சமர்ப்பித்த மனுவை பரிசீலித்த பின்னரே, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ரொஹான்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரைக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
மனு இன்று (14) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மனுதாரர் சார்பில் சட்டத்தரணி ரம்ஸி பாஷா வழிகாட்டலின் கீழ் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைக்கையில், சிறைத்தண்டனை அனுபவித்து வரும் தனது கட்சிகாரருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு இலஞ்ச வழக்கு கொழும்பு இலக்கம் 11 மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
தனது கட்சிகாரருக்கு எதிரான இலஞ்ச வழக்கில் இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனையைப் பெற்றுக்கொள்வதற்காக இலஞ்சம் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நீதிமன்ற ஊழியர் ஒருவர் மற்றும் சரண குணவர்தனவின் மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டதன் பின்னர், இவ்வழக்கை வேறொரு நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் மேல் நீதிமன்ற நீதிபதி அக் கோரிக்கையை நிராகரித்ததாக ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
இவ்வழக்கு தொடர்பான பிரதிவாதி தரப்பு சாட்சியங்களை அழைப்பதற்கு எதிர்வரும் 23 ஆம் திகதி திகதியிடப்பட்டுள்ளதாகவும், இம்மனு தொடர்பில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை மேல் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு நடவடிக்கைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறும் ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.
அத்துடன், குறித்த வழக்கை இலக்கம் 11 மேல் நீதிமன்றத்திலிருந்து அகற்றி வேறொரு நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறும் ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்தில் மன்றாடினார்.
அதற்கமைய, முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கவனத்தில் கொண்ட நீதிபதிகள் குழாம், இம்மனுவை மீண்டும் 28 ஆம் திகதி அழைப்பதற்கு உத்தரவிட்டதுடன், மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவித்தல் (Notice) அனுப்புவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது.