New Updates! Fresh news just arrived.

சமிட்புர சதுவின் தகவலில் மற்றுமொரு துப்பாக்கி மீட்பு! - G...

News

சமிட்புர சதுவின் தகவலில் மற்றுமொரு துப்பாக்கி மீட்பு!

August 22, 2026 9:09 am
சமிட்புர சதுவின் தகவலில் மற்றுமொரு துப்பாக்கி மீட்பு!
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சமிட்புர சது என அழைக்கப்படும் திமுத்து சதுரங்கவிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், மேலும் ஒரு துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின்படி, வெல்லம்பிட்டிய – சேதவத்தை பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் வகை துப்பாக்கி ஒன்று நேற்று (21) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

28 வயதான குறித்த சந்தேகநபர் இலங்கையில் இருந்து தப்பிச் சென்று ஓமானில் தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டு, கடந்த 18ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் அவர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

முன்னதாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போதும், வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு ரிவோல்வர் மற்றும் 12 தோட்டாக்கள் மட்டக்குளி பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டிருந்தன.

சந்தேகநபரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now