New Updates! Fresh news just arrived.

இலங்கை கடற்பரப்பில் மற்றுமொரு ஈரான் கப்பலா? அரசாங்கம் வெள...

News

இலங்கை கடற்பரப்பில் மற்றுமொரு ஈரான் கப்பலா? அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

March 5, 2026 5:45 pm
இலங்கை கடற்பரப்பில் மற்றுமொரு ஈரான் கப்பலா? அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
இலங்கை கடல் எல்லைக்கு அருகில் உள்ள சர்வதேச கடல் பகுதியில் மற்றொரு ஈரானிய கப்பல் தற்போது நிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் விளக்கமளித்துள்ளது.

இன்று (05) நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ பல விடயங்களை தெரிவித்துள்ளார்.

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது இலங்கையின் கடற்பரப்பை ஒட்டியுள்ள பிரத்தியேகப் பொருளாதார வலயத்திலேயே இருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

குறித்த கப்பலில் உள்ள மக்களின் உயிருக்கு அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இந்த பணிகள் முடிந்தவுடன் நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் என்ற ரீதியில் சர்வதேச சட்டங்களுக்கு அமையவும் மனிதாபிமான அடிப்படையிலும் தலையிட்டு வருகின்றோம். பிராந்திய அமைதியைப் பாதுகாக்கத் தலையிடுகிறோம். மேலதிக தகவல்களைப் பின்னர் அறிவிப்போம்."

"எமது கரையிலிருந்து 12 கடல் மைல்கள் வரையான தேசிய கடற்பரப்பு எமக்குச் சொந்தமானது. அந்த 12 முதல் 200 கடல் மைல்கள் வரை இருப்பது பிரத்தியேகப் பொருளாதார வலயம். இந்த வலயத்தில் சர்வதேச சட்டம் அமுலில் உள்ளது.

பொருளாதார நடவடிக்கைகளுக்கு மாத்திரமே அங்கு எமக்கு அதிகாரம் உள்ளது, இராணுவ நடவடிக்கைகளுக்கு அல்ல.

நேற்று தாக்கப்பட்ட கப்பல் காலி துறைமுகத்திலிருந்து 19 கடல் மைல் தொலைவில் நடந்துள்ளது. இது தொடர்பில் நேற்று அதிகாலை 5.08 மணிக்கே கடற்படையின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு முதலில் தகவல் கிடைத்தது.

தாக்குதல் நடத்தப்பட்டதா இல்லையா என்பது தொடர்பில் அல்ல, அப்பகுதியில் சடலங்கள் மிதக்கின்றன என்ற தகவலே முதலில் கிடைத்தது.

ஒரு மணி நேரத்திற்குள் இலங்கை கடற்படை மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்தது. அந்த நேரத்தில் தாக்குதல் குறித்துத் தேடுவதை விட, மனிதாபிமான அடிப்படையில் தலையிட்டு உயிர்களைக் காப்பாற்றுவதே எமது நோக்கமாக இருந்தது என விளக்கமளித்துள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now