New Updates! Fresh news just arrived.

பெக்கோ சமன் தாயார் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது! - Gu...

News

பெக்கோ சமன் தாயார் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது!

August 24, 2026 8:15 am
பெக்கோ சமன் தாயார் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது!
பெக்கோ சமன் என அழைக்கப்படும் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபரின் தாயார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மற்றுமொரு சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இக்கொலை தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஒருவரிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே புதிய கைது இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 19ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 21 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, கடந்த 12ஆம் திகதி இடம்பெற்ற ‘பெக்கோ சமன்’ என்பவரின் தாயாரை சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு அவர் உதவியிருந்தமை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து, குறித்த சந்தேகநபர் நேற்று (23) வலஸ்முல்ல நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவரிடம் பெறப்பட்ட மேலதிக தகவல்களைத் தொடர்ந்து, கொலைச் சம்பவத்திற்கு உதவியதாகக் கூறப்படும் 24 வயதுடைய மற்றுமொரு நபர் தங்கல்லை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மித்தெனிய பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மித்தெனிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மித்தெனிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now