New Updates! Fresh news just arrived.

காணி விடுவிக்க கோரி மற்றுமொரு போராட்டம்: 40 ஆண்டு வலியைச்...

News

காணி விடுவிக்க கோரி மற்றுமொரு போராட்டம்: 40 ஆண்டு வலியைச் சுமந்து வயாவிளான் மக்கள் வீதியில் குமுறல்!

August 2, 2026 12:13 pm
காணி விடுவிக்க கோரி மற்றுமொரு போராட்டம்: 40 ஆண்டு வலியைச் சுமந்து வயாவிளான் மக்கள் வீதியில் குமுறல்!
தாம் வாழ்ந்த பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி வயாவிளான் மக்கள் போராட்டம் ஒன்றை இன்று (2) ஆரம்பித்துள்னர்.

வசாவிளான் சந்தியில் குறித்த போராட்டம் இன்று முற்பகல் ஆரம்பிக்கப்பட்டது.

40 ஆண்டுகளாக இராணுவ ஆக்கிரமிப்பால் வெளியேறியிருந்த மக்கள் தமது வலிகளை சுமந்தவாறு முன்னெடுத்திருந்த இந்த போராட்டத்தில்,
அரசே! எங்கள் குடியிருப்புக்கள், விவசாய நிலங்கள், பாடசாலைகள், கோவில்கள், கைத்தொழில் நிலையங்கள் அனைத்தையும் எமக்கே தந்துவிடு என்ற வலுவான கோரிக்கையுடன் வயாவிளான் மீள் குடியேற்ற அமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பேரளவில் திரண்டுவந்து தமக்கான நீதியை வலியுறுத்தி முன்னெடுத்த போராட்டத்தில் சமூக அமைப்புகள் அரசியல்வாதிகள் என பலதரப்பினரது பிரசன்னத்துடன் விவசாய நிலங்கள் பேசட்டும், சிதைந்துபோய் கிடக்கும் வீடுகளும் கல்விக் கூடங்களும் நாம் வாழ்ந்த வரலாற்றைச் சாட்சி சொல்லட்டும், எமது நிலங்கள் எமக்கு கிடைக்கப்பெற வேண்டும் என்ற கோசங்களுடன் போராட்டத்தை முன்னெடுத்திருந்ததுடன், கடந்த காலங்களில் விடுவிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்ட காணிகளை இந்த அரசு உடன் விடுவிக்க வேண்டும் என்றும், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக்ன்கோரியே நாம் போராடுகின்றோமே தவிர எவருக்கும் எதிராக நாம் இந்த போராட்டத்தை முன்னெடுக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now