New Updates! Fresh news just arrived.

ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரண்...

News

ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரண்!

September 22, 2026 3:09 pm
ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரண்!
ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்ட மூலத்தினுடைய சில ஏற்பாடுகளானது அரசியலமைப்புக்கு முரணானது எனவும் உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, இவ் திருத்தச் சட்டமூலம் குறித்து உயர்நீதிமன்றின் தீர்மானத்தினையும் சபாநாயகர் இன்று பாராளுமன்றுக்கு அறியப்படுத்தினார்.

குறித்த சட்டமூலத்தினுடைய சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானது என்று உயர்நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, ஊழல் எதிர்ப்புச் சட்டமூலத்தினுடைய 17 ஆவது சரத்தை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் சர்ஜன வாக்கெடுப்பு அவசியம் என்றும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.

உயர் நீதிமன்றின் குறித்த தீர்மானத்தினை சபாநாயகர் இவ்வாறு பாராளுமன்றில் அறிவித்தார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now