மானிப்பாய் சபையில் ஊடகவியலாளர் கஜிந்தனுக்கு அனுபதி மறுப்ப...
News
மானிப்பாய் சபையில் ஊடகவியலாளர் கஜிந்தனுக்கு அனுபதி மறுப்பு: உறுப்பினர் வெளிநடப்பு!
மானிப்பாய் பிரதேச சபையின் அமர்வானது இன்றையதினம் நடைபெற்ற நிலையில் அறிக்கையிடுவதற்காக சென்ற எமது ஊடகவியலாளர் புவனேஸ்வரன் கஜிந்தனுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் உறுப்பினர் ச.க.அச்சுதபாயன் சபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார்.
ஊடகவியலாளர் கஜிந்தனும் வேறொரு ஊடகவியலாளரும் இன்றையதினம் குறித்த மானிப்பாய் சபை அமர்வை அறிக்கையிட சென்றபோது மற்றைய ஊடகவியலாளருக்கு அனுமதி வழங்கப்பட்டு ஊடகவியலாளர் கஜிந்தனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, வெளிநடப்பு செய்த உறுப்பினர் அச்சுதபாயன் கருத்து தெரிவிக்கையில்;
ஊடகவியலாளர் கஜிந்தன் கட்டடம் அமைப்பு தொடர்பில் தவறான செய்தி ஒன்றை பிரசுரித்ததாக கருதியே குறித்த அனுமதி மறுக்கப்பட்டதாக தவிசாளர் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் வெளிப்படுத்திய விடயமானது தவறல்ல. பிரதேச சபையிலேயே தவறு.
மானிப்பாய் சபை தொடர்பில் மக்களிடம் நல்ல அபிப்பிராயம் இல்லை. சபையில் பல விடயங்கள் குறித்து சுட்டிக்காட்டப்படுகின்றது. இருப்பினும் அவற்றை திருத்தாமல், அவை செய்தியாக பிரசுரிக்கப்படும்போது அந்த செய்தியினை வெளியிடும் ஊடகவியலாளரை வெளியேற்றுவது தவறான செயல்.
குற்றம் இழைக்காதவர்கள் பயப்பட தேவையில்லை. சபையிலுள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் ஊடகவியலாளரை உள்ளே விடத்தான் விருப்பம். ஆனால் தவிசாளர் தான் குறித்த தடையை ஏற்படுத்தினார்.
குறித்த ஊடகவியலாளருக்கு எப்போது அனுமதி வழங்கப்படுகின்றதோ அப்போதுதான் நான் சபை அமர்வில் கலந்துகொள்வேன் என கூறிவிட்டு சபை அமர்விவிருந்து வெளியேறிவிட்டேன் என தெரிவித்தார்.
பு.கஜிந்தன்