அனுஷ பெல்பிட்ட மீண்டும் விளக்கமறியலில்!
News
அனுஷ பெல்பிட்ட மீண்டும் விளக்கமறியலில்!
சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை ஈட்டியமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்டவை, எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (06) உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் சந்தேக நபர் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த பின்னரே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
இலங்கைத் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகமான அனுஷ பெல்பிட்ட, தனக்குச் சொந்தமான 4 கோடியே 60 இலட்சம் ரூபா பணத்தை எவ்வாறு ஈட்டினார் என்பதை வெளிப்படுத்தத் தவறிய குற்றச்சாட்டில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அண்மையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.