New Updates! Fresh news just arrived.

அனோஜன் சார்பில் சவூதி அரேபிய உயர் நீதிமன்றில் மேன்முறையீட...

News

அனோஜன் சார்பில் சவூதி அரேபிய உயர் நீதிமன்றில் மேன்முறையீடு!

October 11, 2026 9:28 pm
அனோஜன் சார்பில் சவூதி அரேபிய உயர் நீதிமன்றில் மேன்முறையீடு!
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் இன்று (11) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கை மற்றும் சவூதி சட்டத்தரணிகள் குழுவினுடைய கூட்டு முயற்சியின் பலனாக குறித்த மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மேன்முறையீட்டைத் தயாரிப்பதற்காக இலங்கை விசேட சட்டத்தரணிகள் குழுவிற்கும் சவூதி சட்டத்தரணிகளுக்கும் இடையில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதோடு, சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வாத்தினுடைய ஒருங்கிணைப்பில் ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தினூடாக இது ஏற்பாடு செய்யப்பட்டது.

சமூக வலைத்தளமொன்றில் முஹம்மது நபிகள் நாயகத்தினை அவமதிக்கும் வகையில் பதிவொன்றினை வெளியிட்டமையின் காரணமாகவே சவூதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் அனோஜன் சிவராசாவிற்கு குறித்த மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இதற்கு முன்னர் கீழ் நீதிமன்றமொன்றினால் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட போதிலும், பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றமானது குறித்த தீர்ப்பை மாற்றி மரண தண்டனையை விதித்தது.

மேலும், சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் சிவராசா அனோஜனின் தண்டனையினை நீக்குவதற்கான பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட இலங்கையின் சட்டத்தரணிகள் குழுவில் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும, ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா மற்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அசாத் நவாவி ஆகியோர் அடங்குவர்.

மேலும், ஜித்தாவில் உள்ள இலங்கைத் தூதரகப் பிரதிநிதி நீதிபதி எம்.டீ. முஹம்மத், சட்டத்தரணியான ஃபாரிஸ் ஃபஸால் அப்துல் ஹஃபீல் முஹம்மத் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான பைஸர் முஸ்தபாவினுடைய ஒருங்கிணைப்புச் செயலாளரான முஹம்மத் ரியாஸ்தீன் சில்மி ஆகியோரும் குறித்த தூதுக்குழுவினை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now