புதிய அரசியல் கட்சிகளின் பதிவுக்கான விண்ணப்பம் கோரல்! - G...
News
புதிய அரசியல் கட்சிகளின் பதிவுக்கான விண்ணப்பம் கோரல்!
2026 ஆம் ஆண்டில் அரசியல் கட்சிகளினை அங்கீகரிப்பதற்காக, தகுதியுள்ள அரசியல் கட்சிகளிடம் இருந்து தேர்தல் ஆணைக்குழுவால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதன்படி, குறித்த விண்ணப்பங்களினை ஜனவரி 28 ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரையும் சமர்ப்பிக்க முடியும்.
விண்ணப்பப் படிவமானது, 2026.01.21 ஆம் திகதி இடப்பட்ட 2472/21 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு அமையத் தயாரிக்கப்பட்ட ஆவணங்களோடு, கட்சியின் செயலாளரின் கையொப்பத்தோடு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
விண்ணப்பப் படிவத்தினை, தேர்தல் ஆணைக்குழுவினுடைய உத்தியோகபூர்வ இணையத்தளம் மூலமாகவோ அல்லது மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் மற்றும் தேர்தல் செயலகத்தில் இருந்தோ பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
கட்சி அங்கீகரிக்கப்படும் இடத்து, 2026.01.13 ஆம் திகதியிடப்பட்ட 2471/24 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட (ஆ) அட்டவணையிலுள்ள கட்சிச் சின்னங்களில், அந்தக் கட்சிக்காக ஒதுக்கி வைத்துக்கொள்ள எதிர்பார்க்கும் சின்னத்தினை தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
இதற்கு மேலதிகமாக கட்சியின் யாப்பு, உத்தியோகத்தர் குழாம் பட்டியல், கடந்த நான்கு வருடங்களுக்கான பெண் உத்தியோகத்தர்களினுடைய பெயர்கள், விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும் திகதிக்கு முன்னரான நான்கு வருடங்களுக்கான கணக்காய்வு அறிக்கைகள், கட்சியினுடைய தற்போதைய கொள்கைப் பிரகடனம் மற்றும் அரசியல் கட்சியொன்றாகக் குறைந்தது கடந்த நான்கு வருடங்களாவது தொடர்ச்சியாகச் செயற்பட்டதினை உறுதிப்படுத்துவதற்காகச் சமர்ப்பிக்கக்கூடிய அனைத்து ஆவணங்களினையும் தனித்தனி கோப்புகளாகச் சமர்ப்பிக்க வேண்டும்.
அத்தோடு, உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களினை பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி பிற்பகல் 03.00 மணி வரைக்கும் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அவற்றினை, உரிய கட்சியினுடைய செயலாளரினால் தேர்தல் ஆணைக்குழுவிற்குப் பதிவுத் தபாலில் அனுப்புவதன் ஊடாகவோ அல்லது நேரடியாக வருகை தந்து கையளிப்பதன் மூலமோ சமர்ப்பிக்க முடியும்.
குறித்த விண்ணப்பங்களினை அனுப்பும்போது, கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் அரசியல் கட்சிகளினை அங்கீகரிப்பதற்கான விண்ணப்பம் - 2026' எனக் குறிப்பிடப்பட வேண்டும் எனவும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
விண்ணப்பங்களினை தலைவர், தேர்தல் ஆணைக்குழு, சரண மாவத்தை, இராஜகிரிய என்னும் முகவரிக்கு அனுப்புமாறும் அல்லது அலுவலகத்திற்கு வருகை தந்து கையளிக்குமாறும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
விண்ணப்பங்களினை ஏற்றுக்கொள்வதற்கான இறுதித் திகதியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குப் பின்பு கிடைக்கும் விண்ணப்பங்கள் குறித்து தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்காது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.