New Updates! Fresh news just arrived.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள...

News

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரல்

July 20, 2026 7:47 pm
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரல்
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு விதந்துரைக்கப்படுவதற்கு ஆர்வம் உள்ள தனிநபர்களிடமிருந்து அரசியலமைப்புப் பேரவை விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.

2026 ஜூலை 31 ஆம் திகதி அன்றோ அல்லது அதற்கு முன்னரோ
இதற்கான விண்ணப்பப்பட்வங்களை, இலங்கை பாராளுமன்றத்தின் இணையதளத்தில் “விரைவான அணுகல்” என்பதன் கீழ் ‘இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான விதந்துரைத்தல்” என்ற பெயரில் கிடைக்கப்பெறும் விண்ணப்பப் படிவத்திற்கு அமைவாகத் தயாரிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

குறித்த விண்ணப்பங்கள் அரசியலமைப்புப் பேரவையின் பதில் செயலாளர் நாயகம், அரசியலமைப்புப் பேரவை – அலுவலகம், இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே என்ற முகவரிக்கு அல்லது constitutionalcouncil@parliament.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும்.

கடித உறையின் இடதுபுற மேல் மூலையில் அல்லது மின்னஞ்சலின் விடயமாக ‘இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான விதந்துரைத்தல்’ எனக் குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now