New Updates! Fresh news just arrived.

தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பங்கள் ...

News

தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரல்!

July 20, 2026 8:09 pm
தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரல்!
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தற்போதைய மற்றும் எதிர்கால உறுப்பினர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக, தகுதியுடைய நபர்களிடமிருந்து அரசியலமைப்புப் பேரவை விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.

விண்ணப்பதாரர்கள் பாராளுமன்ற இணையதளமான www.parliament.lk உள்ள மாதிரிப் படிவத்திற்கு அமைவாக விண்ணப்பங்களினை தயாரித்து, 2026 ஜூலை 31ஆம் திகதிக்கு முன்னபதாக சமர்ப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களினை ‘அரசியலமைப்புப் பேரவையின் பதில் செயலாளர் நாயகம், பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே’ என்னும் முகவரிக்குத் தபாலிலோ அல்லது constitutionalcouncil@parliament.lk என்கின்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்ப முடியும். கடித உறை அல்லது மின்னஞ்சலின் விடயப் பரப்பில் ‘தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்காக விதந்துரைத்தல்’ என்று குறிப்பிடுவது கட்டாயமாகும்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now