New Updates! Fresh news just arrived.

வைத்தியர்களுக்கான இடைநிலைத் தரநிலை தொடர்பில் 6 பேர் கொண்ட...

News

வைத்தியர்களுக்கான இடைநிலைத் தரநிலை தொடர்பில் 6 பேர் கொண்ட குழு நியமனம்!

September 1, 2026 10:40 am
வைத்தியர்களுக்கான இடைநிலைத் தரநிலை தொடர்பில் 6 பேர் கொண்ட குழு நியமனம்!
வைத்திய அதிகாரிகளுக்கான இடைநிலைத் தரநிலையை உருவாக்குவது தொடர்பில் ஆய்வு செய்து தேவையான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக ஆறு உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்கினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குழுவின் தலைமைப் பொறுப்பு சுகாதார மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் வைத்தியர் ஹங்சக விஜேமுனிக்கு வழங்கப்பட்டுள்ளது. வைத்தியர் அமில சுரங்க குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இக்குழுவில் வைத்தியர் டபிள்யூ.கே. விக்ரமசிங்க, வைத்தியர் சமிந்த சமரகோன், சிரேஷ்ட பேராசிரியர் எச்.டி.என்.பி. ஓபாத மற்றும் சிரேஷ்ட பேராசிரியர் திலீப் டி சில்வா ஆகியோரும் அங்கம் வகிக்கின்றனர்.

இடைநிலைத் தரநிலையின் வரையறை, அதில் உள்ளடக்கப்பட வேண்டிய மருத்துவத் துறைகள், வைத்தியர்களை உரிய துறைகளுக்குத் தெரிவு செய்யும் முறை, அவர்கள் குறிப்பிட்ட துறையில் பணியாற்ற வேண்டிய காலப்பகுதி மற்றும் அவர்களுக்கான சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை இந்தக் குழு ஆராயவுள்ளது.

அத்துடன், வைத்திய அதிகாரிகளின் இடமாற்றம் தொடர்பான நடைமுறைகள் குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

தொடர்புடைய தொழிற்சங்கங்கள் மற்றும் ஏனைய பங்குதாரர்களிடமிருந்து கருத்துகளையும் யோசனைகளையும் பெற்றுக்கொண்டு, ஒரு மாதத்திற்குள் தமது பரிந்துரைகளை சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சிடம் சமர்ப்பிக்குமாறு குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now