New Updates! Fresh news just arrived.

மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு பதில் தலைவர் நியமனம்! - G...

News

மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு பதில் தலைவர் நியமனம்!

September 21, 2026 9:52 pm
மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு பதில் தலைவர் நியமனம்!
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர், எம். ஸ்ரீ மெவன் அந்தனி எதிரிமாண்ணசூரிய கொறயா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராகக் கடமையாற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி நலீன் ரொஹாந்த அபேசூரிய, எதிர்வரும் 24 ஆம் திகதி வரை வெளிநாடு செல்லவுள்ளதால், குறித்த பதவியில் பதில் கடமையாற்றுவதற்காக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, மாயாதுன்ன கொறயா ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (21) முற்பகல் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now