New Updates! Fresh news just arrived.

நிதி உதவியாளராக சிரேஷ்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தி...

News

நிதி உதவியாளராக சிரேஷ்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திருமதி எஸ்.எம்.எப். அமான் நியமனம்!

April 21, 2026 3:48 pm
நிதி உதவியாளராக சிரேஷ்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திருமதி எஸ்.எம்.எப். அமான் நியமனம்!
கல்முனை வலயக் கல்வி அலுவலக நிதி உதவியாளராக மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் வகுப்பு ஒன்றைச் சேர்ந்த சிரேஷ்ட உத்தியோகத்தர் திருமதி எஸ். எம். எப். அமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமன கடிதத்தை கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் எம் எஸ் ஸஹதுல் நஜீம் இன்று (20) வழங்கி வைத்தார். இந்த நிகழ்வில் கல்முனை வலய கல்வி அலுவலக கணக்காளர் ரீ .லிங்கேஸ்வரனும் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து திருமதி எஸ் .எம். எப். அமான் நிதி உதவியாளர் பதவிக்கான கடமைப் பொறுப்புக்களை ஏற்கும் நிகழ்வு கணக்காளர் ரீ லிங்கேஸ்வரன் தலைமையில் நிதிப் பிரிவில் இடம்பெற்றது.

அத்துடன் கல்முனை வலயக் கல்வி அலுவலக நிதி பிரிவின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் தரம் 1 ஐச் சேர்ந்த திரு .ஜெயகிருஷ்னா நியமிக்கப்பட்டு பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.


இந்த நிகழ்வில் நிதிப் பிரிவு உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now