New Updates! Fresh news just arrived.

போதைப்பொருள் ஒழிப்புக்கு ஒத்துழைப்பை கோரிய பேராயர்! - Gur...

News

போதைப்பொருள் ஒழிப்புக்கு ஒத்துழைப்பை கோரிய பேராயர்!

September 7, 2026 7:21 am
போதைப்பொருள் ஒழிப்புக்கு ஒத்துழைப்பை கோரிய பேராயர்!
நாட்டில் பெரும் சமூகப் பாதிப்பை ஏற்படுத்தி வரும் போதைப்பொருள் பிரச்சினையை கட்டுப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தலுக்கு சில சந்தர்ப்பங்களில் மீன்பிடிப் படகுகள் பயன்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், அவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளில் மீனவர்கள் எவரும் ஈடுபடாமல் இருப்பதுடன், அவற்றைத் தடுப்பதற்கும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பேருவளை பண்டாரவத்தையில் அமைந்துள்ள புனித லாசர் ஆலயத்தில் நேற்று (06) நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

சிலரின் சுயநல நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் இத்தகைய நடவடிக்கைகள் ஒட்டுமொத்த சமூகத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக பேராயர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, போதைப்பொருள் பாவனைக்கு இளம் தலைமுறையினர் அதிகளவில் சிக்கி வருவதால், அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, நாட்டிலிருந்து போதைப்பொருள் அச்சுறுத்தலை அகற்றுவதற்கு சமூகத்தின் அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் ஒன்றிணைய வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

இந்த முயற்சிக்கு மீனவ சமூகமும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கேட்டுக்கொண்டார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now