New Updates! Fresh news just arrived.

இராணுவத்திலிருந்து தப்பியோடிய நபர் கைது!

News

இராணுவத்திலிருந்து தப்பியோடிய நபர் கைது!

April 16, 2026 6:52 pm
இராணுவத்திலிருந்து தப்பியோடிய நபர் கைது!
முல்லைத்தீவு, உடுப்புக்குளம் கடற்கரைப் பகுதியில் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்டிருந்த விசேட நடவடிக்கையின் போது, இராணுவத்தில் இருந்து தப்பியோடி தலைமறைவாக இருந்த நபர் ஒருவரினை முல்லைத்தீவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று மாலை (15), முல்லைத்தீவு - துண்டை, உடுப்புக்குளம் கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமான வகையில் வலை இழுக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவளுக்கு அமைவாக அங்கு சென்ற காவல்துறையினர் சோதனையிட்ட நிலையில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த டிராக்டருடன் குறித்த நபர் பிடிபட்டுள்ளார்.

இதன்படி, குறித்த நபர் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு இராணுவ சேவையில் இருந்து தப்பியோடியவர் (AWOL) எனவும் தற்போது தொழிலாக டிராக்டர் ஓட்டுநராகப் பணிபுரிவதும் தெரியவந்துள்ளது.

இதேவேளை, காவல்துறையினர் சுற்றிவளைத்த போது, அங்கிருந்த மற்றொரு நபர் தப்பியோடியுள்ள நிலையில் குறித்த நபர் சட்டவிரோத வலை இழுக்கும் தொழிலில் நேரடியாகத் தொடர்புடையவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட டிராக்டர் ஆகியவற்றை முல்லைத்தீவு காவல் நிலையத்தில் தடுத்து வைத்துள்ள காவல்துறையினர், மேலதிக விசாரணைகளினை முன்னெடுத்து வருவதுடன், தப்பியோடிய மற்றைய நபரைத் தேடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now