பசில் ராஜபக்சவை உடனடியாக கைது செய்யவும் - சிஐடிக்கு நீதிம...
News
பசில் ராஜபக்சவை உடனடியாக கைது செய்யவும் - சிஐடிக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (17) உத்தரவிட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) சட்டவிரோத சொத்துக்கள் பிரிவு தாக்கல் செய்த விசாரணை அறிக்கை இன்று நீதிமன்றத்தில் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ. 7.8 மில்லியன் நிதியை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தாமல், ஊவா மாகாண சபைத் தேர்தலுக்காக 12,000 டி-ஷர்ட்கள் அச்சிட பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த நிதி முறைகேடு தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் பிரிவு விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தது.
வழக்கு விசாரணையின் போது, தொடர்புடைய சந்தேகநபர்கள் மீது பொதுச்சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இந்த வழக்கு மீண்டும் அக்டோபர் 14ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.