New Updates! Fresh news just arrived.

டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட ‘கொண்ட ரஞ்சி’ கைது! - G...

News

டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட ‘கொண்ட ரஞ்சி’ கைது!

September 9, 2026 8:50 am
டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட ‘கொண்ட ரஞ்சி’ கைது!
டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ரஞ்சித் குமார் என அழைக்கப்படும் ‘கொண்ட ரஞ்சி’ இன்று (09) குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் இன்று காலை சுமார் 8.00 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததைத் தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்தாலிக்கு தப்பிச் செல்ல முற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், கடந்த ஜனவரி 09ஆம் திகதி டுபாய் பாதுகாப்புப் படையினரால் ‘கொண்ட ரஞ்சி’ கைது செய்யப்பட்டிருந்தார்.

அவருடன் அவரது மனைவி மற்றும் குழந்தையும் அப்போது கைது செய்யப்பட்டிருந்த போதிலும், பின்னர் அவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலும் ‘கொண்ட ரஞ்சி’ பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ள நிலையில், அவரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now