New Updates! Fresh news just arrived.

யாழில் துப்பாக்கி முனையில் பெண்களை அச்சுறுத்திய அருச்சுனா...

News

யாழில் துப்பாக்கி முனையில் பெண்களை அச்சுறுத்திய அருச்சுனா எம்.பி!

April 26, 2026 1:46 pm
யாழில் துப்பாக்கி முனையில் பெண்களை அச்சுறுத்திய அருச்சுனா எம்.பி!
நாடாளுமன்ற உறுப்பினரான இராமநாதன் அருச்சுனா துப்பாக்கி முனையில் பெண்களினை அச்சுறுத்திய சம்பவம் பல்வேறு அதிர்வலைகளினை ஏற்படுத்தியுள்ளது.

இதன்படி, குறித்த சம்பவமானது நேற்றையதினம் (25) யாழ்ப்பாணம் - பெரியவிளான் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்;

சம்பவம் இடம்பெற்ற காணியினுடைய உரிமை தொடர்பாக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகின்றது. குறித்த காணியானது தனது காணி என நாடாளுமன்ற உறுப்பினரான இராமநாதன் அருச்சுனா கூறி வருகின்ற நிலையில், வேறொரு தரப்பினரும் அதில் தங்களது காணி இருப்பதாகவும் உரிமை கோரி வருகின்றனர்.

அந்தவகையில் நேற்றையதினம் குறித்த காணியினை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா ஈடுபடும்போது, அங்கு வந்த பெண்கள் இருவர் அதில் ஒருபகுதி தமது காணி என தெரிவித்து முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

எதிரே நின்ற பெண்கள் கையில் எந்தவிதமான ஆயுதங்களோ, பொருட்களோ இல்லாமல் நின்ற நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா திடீரென தனது கை துப்பாக்கியினை எடுத்து குறித்த பெண்காளினை மிரட்டியுள்ளார்.

பெண்கள் மீதான குறித்த சம்பவமானது மிகுந்த அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

அநுர அரசானது நாடாளுமன்ற உறுப்பினரான இராமநாதன் அருச்சுனாவுக்கு துப்பாக்கி கொடுத்துள்ளமையானது மக்களுக்கு ஆபத்து என்று ஏற்கனவே பலதடவைகள் பல்வேறு தரப்பினரும் சுட்டிக் காட்டி இருந்த நிலையில் இதுவரை அந்த துப்பாக்கியானது மீளப் பெறப்படவில்லை. இது இவ்வாறு தொடருமாக இருந்தால் அசம்பாவிதங்கள் ஏற்படும் என்று மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now