அஸ்வெசும மோசடி: நோர்வூட் ஊழியர்கள் பலர் ஒப்புதல் வாக்குமூ...
News
அஸ்வெசும மோசடி: நோர்வூட் ஊழியர்கள் பலர் ஒப்புதல் வாக்குமூலம்!
நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றும் சில ஊழியர்கள், அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் தனதும் தமது உறவினர்களதும் பெயர்களில் முறைகேடாகப் பணம் பெற்றுள்ளனர். இது தொடர்பான முறையான விசாரணைகள் தொடங்கப்படுவதற்கு முன்பே, தாங்கள் இத்தவறைச் செய்ததை ஒப்புக்கொண்டுள்ளோடு, அது குறித்த தகவல்களைப் பிரதேச செயலாளரிடமும் தாமாகவே முன்வந்து அளித்துள்ளதாகப் பிரதேச செயலகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த பிரதேச செயலகத்தின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர், 2023ஆம் ஆண்டு முதல் அஸ்வெசும நிதியைத் தங்களது பெயர்களுக்கும், நெருங்கிய உறவினர்களின் பெயர்களுக்கும் சட்டவிரோதமாகப் பெற்றுக்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.
நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந்த அஸ்வெசும நிதி மோசடி தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பெயர் பட்டியலை நுவரெலியா மாவட்ட செயலாளருக்கு, நோர்வூட் பிரதேச செயலாளர் எழுத்துப்பூர்வமாக அனுப்பி வைத்துள்ளார்.
இவ்வாறு பெயர் பட்டியல் மாவட்ட செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்கள், தாம் இழைத்த மோசடி தொடர்பில் பிரதேச செயலாளரிடம் நேரில் சென்று ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதேவேளை, இந்நிதி மோசடியுடன் தொடர்புடைய அஸ்வெசும பிரிவின் அதிகாரிகள் இருவர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், குறித்த இரு அதிகாரிகளினாலும் அஸ்வெசும நிதி வைப்பிலிடப்பட்ட அவர்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் 6 ஆசிரியர்கள் உள்ளிட்டோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.