New Updates! Fresh news just arrived.

அஸ்வெசும நிதி மோசடியை ஒப்புக்கொண்ட நோர்வுட் பிரதேச செயலக ...

News

அஸ்வெசும நிதி மோசடியை ஒப்புக்கொண்ட நோர்வுட் பிரதேச செயலக அதிகாரிகள் தொடர்பில் விசாரணை!

October 15, 2026 2:55 pm
அஸ்வெசும நிதி மோசடியை ஒப்புக்கொண்ட நோர்வுட் பிரதேச செயலக அதிகாரிகள் தொடர்பில் விசாரணை!
நோர்வுட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும நிதியை மோசடியாகப் பெற்றுக்கொண்டதாகத் தானாக முன்வந்து ஒப்புக்கொண்ட அந்த அலுவலகத்தின் 14 ஊழியர்கள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு பொது நிர்வாக அமைச்சுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

குறித்த அலுவலகத்தின் அஸ்வெசும பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த இரண்டு அதிகாரிகள் இன்னமும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அந்த இரு அதிகாரிகளினாலும் பணம் வைப்பு செய்யப்பட்டிருந்த மாவட்ட செயலகத்தின் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஒருவர் மற்றும் ஹட்டன் வலயத்தைச் சேர்ந்த ஆறு ஆசிரியர்களின் பணி, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

நோர்வுட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ள அஸ்வெசும நிதி மோசடி தொடர்பில் கணக்காய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்த சந்தர்ப்பத்தில், அலுவலகத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி அதிகாரிகள், சமூர்த்தி அதிகாரிகள் உட்பட மேலும் பல பிரிவுகளைச் சேர்ந்த 14 ஊழியர்கள் 2023 ஆம் ஆண்டு முதல் அஸ்வெசும நிதியை மோசடியாகப் பெற்றுக்கொண்டதாகத் தானாக முன்வந்து ஒப்புக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளரால் அது குறித்து நுவரெலியா மாவட்ட செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்ட பின்னர், மாவட்ட செயலாளரால் இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி மேலதிக நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது நிர்வாக அமைச்சுக்கு அறியத்தரப்பட்டுள்ளது.

மேலும், நோர்வுட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ள அஸ்வெசும நிதி மோசடி சுமார் 6 கோடி ரூபாவை நெருங்குவதினால், இதன் மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now