ஆசிய அபிவிருத்தி வங்கி 200 மில்லியன் டொலர் நிதியுதவி! - G...
News
ஆசிய அபிவிருத்தி வங்கி 200 மில்லியன் டொலர் நிதியுதவி!
மத்திய கிழக்கின் மோதல் காரணமாக உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கங்களுக்கு மத்தியில், இலங்கையினுடைய பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியினை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானித்துள்ளது.
குறித்த நிதியுதவி, இலங்கையின் வர்த்தகம், முதலீடு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தியினை இலக்காகக் கொண்ட கொள்கைக் கடன் திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளது.அதில் 100 மில்லியன் அமெரிக்க டொலர், மத்திய கிழக்கு நெருக்கடியால் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பொருளாதார அழுத்தத்தினை குறைப்பதற்கான மேலதிக நிதியுதவியாக ஒதுக்கப்பட்டுள்ளது.
தொலைதூர மோதல் ஒன்றினுடைய தாக்கத்தின் காரணமாக எந்தவொரு குடும்பமும் மேலும் வறுமைக்குள் தள்ளப்படக் கூடாது என ஆசிய அபிவிருத்தி வங்கியினுடைய தலைவரான மசாடோ காண்டா (Masato Kanda) சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இலங்கையில் வேலைவாய்ப்புகளினை விரிவாக்குதல், புதிய முதலீடுகளினை ஈர்த்தல் மற்றும் வர்த்தகத்தை ஊக்குவித்தல் என்பன குறித்த திட்டத்தின் பிரதான நோக்கங்களில் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த திட்டத்தின் கீழ் வர்த்தக அமைப்புகளினை நவீனமயமாக்குதல், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறைகளின் போட்டித்தன்மையினை உயர்த்துதல், பொருளாதார வலயங்களுக்கு முதலீடுகளைக் கொண்டுவருதல் மற்றும் ஏற்றுமதியை அதிகரித்தல் ஆகியவற்றுக்காகப் பல சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
குறித்த சீர்திருத்தங்களின் ஊடாக, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாஹிய பொருளாதார அதிர்ச்சிகளுக்கு இலங்கை பொருளாதாரம் சிறப்பாக முகங்கொடுக்கும் திறன் வலுவடையும் என்றும் ஆசிய அபிவிருத்தி வங்கிசுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, மத்திய கிழக்கு மோதலின் பொருளாதாரத் தாக்கங்களில் அதிகரித்து வரும் செலவினங்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மையினை எதிர்கொள்வதற்காக இலங்கை மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளுக்கு ஒட்டுமொத்தமாக 450 மில்லியன் அமெரிக்க டொலர்களினை வழங்கவும் ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானித்துள்ளது. இதற்கமைய, கம்போடியாவிற்கு 250 மில்லியன் அமெரிக்க டொலரினை நிதியுதவி வழங்கப்படவுள்ளது.