New Updates! Fresh news just arrived.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி தொடர்பில் ஆசிய அபிவிருத்தி ...

News

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி தொடர்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் கணிப்பு!

April 10, 2026 2:16 pm
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி தொடர்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் கணிப்பு!
2025 ஆம் ஆண்டில் காணப்பட்ட 5.0 சதவீத இலங்கையினுடைய பொருளாதார வளர்ச்சியானது 2026 இல் 4.0 சதவீதமாக வீழ்ச்சியடையும் என்று ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு மோதலானது, அபிவிருத்தியடைந்து வருகின்ற ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியத்தினுடைய பொருளாதார நிலைவரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பநிலை ஸ்திரத்தன்மை நிலவும் சூழலில், பிராந்திய வளர்ச்சியானது 2026 மற்றும் 2027 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் 5.1 சதவீதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகரித்த எரிசக்தி விலைகள் உற்பத்திச் செலவுகளையும் நுகர்வோர் விலைகளையும் உயர்த்தும் அதேவேளை, அமெரிக்க சுங்க வரி அதிகரிப்புக்கு முன்னதாகவே கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அதீத ஏற்றுமதி நடவடிக்கைகளைத் தொடர்ந்து, ஏற்றுமதி வளர்ச்சி வழமைக்குத் திரும்பும்.

தெற்காசியா மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் தென்கிழக்கு ஆசியா ஆகியவற்றில் நிலவும் உறுதியான உள்நாட்டுத் தேவையானது வளர்ச்சியைத் தொடர்ந்து நிலைநிறுத்தும்.

2025 ஆம் ஆண்டில் பல பொருளாதாரங்களில் தணிந்திருந்த பணவீக்கம், மோதல்களுடன் தொடர்புடைய அதிக எரிசக்தி விலைகளின் தாக்கம் காரணமாக, இந்த ஆண்டு 3.6 சதவீதமாக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய ஆசிய அபிவிருத்தி வங்கியானது வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கையினுடைய பொருளாதார வளர்ச்சி குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2027 ஆம் ஆண்டில் இலங்கையினுடைய பொருளாதார வளர்ச்சியானது 4.2 சதவீதமாகச் சிறியளவில் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பணவீக்கமானது 2026 ஆம் ஆண்டில் -0.5 சதவீதத்தில் இருந்து 5.2 சதவீதமாக உயர்ந்து, பின்னர் 2027 இல் 4.0 சதவீதமாகத் குறைவடையும் என்று ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now