New Updates! Fresh news just arrived.

சிறுவனின் ஆடைகளை களைந்து தாக்குதல்: காணொளி பதிவு செய்தவர்...

News

சிறுவனின் ஆடைகளை களைந்து தாக்குதல்: காணொளி பதிவு செய்தவர் கைது!

April 9, 2026 7:01 pm
சிறுவனின் ஆடைகளை களைந்து தாக்குதல்: காணொளி பதிவு செய்தவர் கைது!
யாழில், 17 வயதுச் சிறுவன் ஒருவரின் ஆடைகளை களைந்து, அவர் மீது தாக்குதல் நடத்தியதினை காணொளியாக பதிவு செய்து வேறு நபர்களுக்கு அனுப்பிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தொடர்புடைய இன்னொருவர் தலைமறைவாகியுள்ளார்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடான், குறித்த சிறுவனின் அண்ணாவை பழிவாங்கும் முகமாகவே இந்த சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை மற்றைய சந்தேகநபரை தேடும் பணிகளில் சுன்னாகம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

மானிப்பாய் நிருபர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now