New Updates! Fresh news just arrived.

அஸ்வெசும மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்...

News

அஸ்வெசும மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்கும் காலவகாசம் நீடிப்பு

November 10, 2026 10:25 pm
அஸ்வெசும மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்கும் காலவகாசம் நீடிப்பு
அஸ்வெசும நலன்புரி நன்மைகளுக்காக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்கான காலவகாசம் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (10) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர், ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்கான காலவகாசம் நாளை (11) முடிவடையவிருந்ததாகக் குறிப்பிட்டார்.

இருப்பினும், பிரதேச செயலகங்கள் ஊடாகப் பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைகள் மற்றும் மேல்முறையீடுகள், ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்கும் நிலைமையைக் கருத்திற் கொண்டு, அதனை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

அதேவேளை, நாளைய தினத்திற்கு பிறகு ஆட்சேபனைகள் மற்றும் மேல்முறையீடுகளைக் கோருவது இணையவழி (Online) முறைமை மூலமாக மட்டுமே நடைபெறும் எனக் குறிப்பிட்ட அமைச்சர், அதன்படி எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இணையவழி முறைமையின் ஊடாக மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும், இதுவரை அஸ்வெசும நன்மைகளுக்காக விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து 105,233 மேல்முறையீடுகள் பதிவாகியுள்ளதாகவும், ஒரு விண்ணப்பதாரர் மற்றொரு விண்ணப்பதாரருக்கு எதிராகத் தாக்கல் செய்துள்ள ஆட்சேபனைகளின் எண்ணிக்கை 1,220 ஆகப் பதிவாகியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ,

"மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை இணையவழியில் சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பு நவம்பர் 11 ஆம் திகதியுடன் முடிவடையவிருந்தது. ஆனால் பிரதேச செயலக மட்டத்தில் பொதுமக்கள் விடுத்த கோரிக்கைகள் மற்றும் மேல்முறையீடுகள், ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்கும் நிலைமைக்கு அமைவாக இந்தக் காலம் நவம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் நவம்பர் 11 முதல் 15 ஆம் திகதி வரை இணையவழி (Online) முறைமையில் மட்டுமே சமர்ப்பிக்க முடியும். இன்று வரை விண்ணப்பதாரர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீடுகளின் எண்ணிக்கை 105,233 ஆகும். ஒரு விண்ணப்பதாரர் மற்றொரு விண்ணப்பதாரருக்கு எதிராகத் தாக்கல் செய்துள்ள ஆட்சேபனைகளின் எண்ணிக்கை 1,220 ஆகும்.

பிரதேச செயலாளரினால் விண்ணப்பதாரர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்சேபனைகளின் எண்ணிக்கை 173, பொதுமக்களின் ஆட்சேபனைகள் 5,426 பதிவாகியுள்ளன. இது தவிர, பிரதேச செயலகங்கள் மூலம் அமைப்புக்குள் (System) உள்ளீடு செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை 2,981 ஆகும். இது தொடர்பான மேலதிக சிக்கல்கள் ஏதேனும் இருப்பின் 1924 என்ற அவசர அழைப்பு இலக்கத்தைத் தொடர்புகொள்ள முடியும்." என்றார்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now